களம் 2019 மாணவர்களின் தனித்திறமைகளுக்கு சவால்விடும் மாணவர் திருவிழா நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையத்திலுள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நடத்தும் “களம் 19 ” மாணவர்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் பண்பாட்டு கலாச்சார போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்திகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டார். மேலும் அவர் மாணவ மாணவிகளிடம் உரையாடுகையில் இக்கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் மிக நல்லொழுக்கத்தை கொண்டவர்களாகவும், அவர்கள் திறமைகளை மிகவும் கவனமாக வெளிப்படுத்துவதாக இருக்கின்றனர்.
இதுவே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றிக்கு அறிகுறி ஆகும், இதே போல் என்றும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும், அதேசமயம் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் நம்மிடையே உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் நீங்கள் நினைக்கும் அத்தனை செயல்களும் வெற்றியாக அமையக்கூடும் இதனை மிக கவனமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பொறியியல் மாணவர்களின் திறமைக்கு சவால் விடும் வகையில் போட்டிகள் அறிவுக்கு தீனி போட சிறப்பு கருத்தரங்குகள் மற்றும் தொழில் பயிற்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன 60க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப போட்டிகள் 30க்கும் மேற்பட்ட பண்பாட்டு கலாச்சார போட்டிகள் நடைபெற்றது, மாணவர்களின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாணவர்களுடன் இணைந்து பல்வேறு பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றார், மேலும் அவர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுமார் 5 லட்சம் மதிப்பிலான பரிசுகளும் வழங்கினார் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply