கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே நடைப்பெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டத்தின் போது விவசாயிகள் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியின் போது வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மகா சபைக் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட மா நர்சரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் கே.ஆர்.பி. அணையில் இருந்து பாலேகுளி ஏரி வரை கால்வாய் வெட்ட நிலம் கொடுத்து ஏமாந்த விவசாயிகள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
மேலும் இந்த மகாசபைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் திரு. இராமகவுண்டர், மாவட்டத் துணைத் தலைவர் வரதராஜ், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட மகளிர் அணித் தலைவர் திருமதி பெருமா’ உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அழித்து விடும் கையில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் மற்றும் எட்டு வழிச்சாலை போன்றவற்றினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதைக் கண்டித்து உரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த மாநில தலைவர் இராமகவுண்டர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்தினை அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் விவசாய நிலங்கள் வழியாக விவசாயிகள் அனுமதியின்றி உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக நிலம் கையகப்படுத்தி ஆயிரக்கணக்கான தென்னை மரம், மா மரம் உள்ளிபட மல்லிப்பூ செடிகளை அழித்து விட்டனர். அழிக்கப்பட்ட மரங்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கவில்லை.
ஆகையால் தமிழக அரசு உடனடியாக தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், இதே போல கே.ஆர்.பி.அணையில் இருந்து பாலேகுளி ஏரிவரை கால்வாய் வெட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆனால் தமிழக அரசு எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய விலை கொடுத்தது போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயர்மின் கோபுரம் மற்றும் கால்வாய் வெட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக குறிப்பிட்டார்.
Leave a Reply