நண்பன் க.ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் இசைக்கவி ரமணன்
நண்பன் க.ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் இசைக்கவி ரமணன்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்
என்று பெரிதாய்ச் சிரிப்பான்
இதயத்தை விழிகளிலே
இயல்பாக ஏற்றிடுவான்
என்றோ பிறந்தவன்போல்
ஏதோ ஞானம் சொல்வான்
இளைஞன் நான் இளைஞனென்றே
இளங்காதல் பாட்டிசைப்பான்!
எவனெதனை எழுதினாலும்
ஏதோவோர் பொறிகண்டால்
எழுந்துநின்று பாராட்டி
எல்லோர்க்கும் சொல்லிமகிழ்வான்
இவனெழுதும் சூத்திரங்கள்
மேடையேறிச் சொல்லிடவே
இன்றைக்கும் கூசிடுவான்
இப்போதும் ஏங்கிடுவான்!
கண்திறந்த காலமுதல்
கவிதையெனும் பேரருளால்
மண்வளர்ந்த மழலையிவன்
மருவுவதோ விண்ணைத்தான்
விண்பறந்து தானுணர்ந்த
விந்தையெல்லாம் மிகவெளிதாய்ப்
பண்ணெடுத்துச் சொல்தொடுத்துப்
பாடுகின்ற தேவனிவன்!
இவனெழுதும் நூல்களினும்
இவன்பேசும் உரைகளினும்
இவன்கானம் கவிதையினும்
இவனெனக்கு மிக முக்யம்
புவிவுயர மூச்சுவிடும்
புண்ணியனை, கண்ணியனை
புவிநலங்கள் அத்தனையும்
சூழ்ந்திடவே வேண்டுகிறேன்!
அன்புடன்,
ரமணன்
படம் : ரமணனின் மகன் விக்ரம்
……………………………………………………………………………………………………………………………….
ரவிக்கு ரமணன் அவர்களை விட பொருத்தமாக எழுத யாரால் இயலும்
அருமையான பாடல், நட்புக்கு நலம் கொடுக்கும் வரிகள் – எம் கே ராஜ்குமார்
வாழ்த்துகள். நன்றி