முதலமைச்சர் ஸ்டாலினை ஏமாற்றிய போலி விளையாட்டு வீரர்!
சென்னை :-
முதலமைச்சர் ஸ்டாலினை ஏமாற்றிய போலி விளையாட்டு வீரர் :
உண்மையான போராளிகள், உண்மையான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், உண்மையான கட்சித் தொண்டர்கள், உண்மையாகவே செயல்படும் சங்கங்கள், உண்மையான விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், உண்மையான விளையாட்டு வீரர்கள் என்று எதையுமே அடையாளம் கண்டு கொள்ள முடியாத ஒரு உண்மைத் தன்மை இல்லாத அரசு இது!
இதைவிட கேவலம் இந்த போலி நபர் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றது.
உலக அளவில் நடைபெற்ற போட்டிகளில் யாராவது வெற்றி பெற்ற கோப்பையை உடனே கையில் கொடுத்து அனுப்பிவிடுவார்களா?
இந்த சாதாரண துறை சார்ந்த ஒரு அறிவு கூட இல்லாதவர் அதன் துறை சார்ந்த அமைச்சர். இந்த நபர் போலியான ஒருவர் என்பதை கூட இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை!?
இதில் அடுத்து இந்தியாவையே ஆள வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில்மகேஷ் அவர்கள், உதயநிதி அவர்களின் ரசிகர் மன்றத்தின் தலைவர். அதுமட்டுமின்றி சாராய ஸ்பான்சர் விளம்பரம் கொண்ட டீ சர்ட்டை அணிந்து கொண்டு (முதல்வர் குடும்பத்தோடு) குழந்தைகளுடன் கிரிக்கெட் பார்க்கும் நிலை.
கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க அரசை எதிர்த்து போராடி, தி.மு.க. வர வேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன்.
நான் பணம் வாங்கி தி.மு.க. விற்கு ஓட்டு போடவில்லை. இலவசமாக தான் தி.மு.க விற்கு ஓட்டு போட்டேன்.
நான் போட்ட ஓட்டிற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று இந்த அரசு சொன்னால், நான் அந்த பணத்தை தர தயாராக உள்ளேன், நான் போட்ட என்னுடைய ஓட்டை எனக்கு திரும்பி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது குறித்து தேர்தல் ஆணையர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். தெரியாமல் நம்பி (காசு வாங்காமல்) ஒரு வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டு அந்த வேட்பாளர் வெற்றி பெற்று விட்டால், ஐந்து ஆண்டுகள் அந்த வேட்பாளர் என்ன தவறு செய்தாலும் நாங்கள் கேட்க உரிமை இல்லையா?
அடுத்த தேர்தல் வரை காத்து இருக்க வேண்டுமா? எங்கள் ஓட்டை ஆண்டிற்கு ஒரு முறை ரெனிவல் பண்ண முடியாதா? கொஞ்சமாவது பயம் இருக்கும் இல்லையா?
இனி ஒரு விதி செய்வோம்..!
தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்
(இலவசமாக ஓட்டு போட்டு அதை திரும்ப பெற பணம் செலவு செய்ய தயாராக இருக்கும் டாக்டர் கலைஞர் அவர்களின் உண்மையான விசுவாசி)
9444111494
Leave a Reply