உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் கல்வி உலகம் திரு. த.வ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் 7 நாள் பயணமாக இலங்கைக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டனர். இந்த இலக்கியப் பயணத்தில் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த பல கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ராவணனால் சீதை சிரைவைக்கப்பட்ட அசோகவனத்தின் முன்பு உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய மேடையில் த.வ.சிவசுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக திரு.த.வ.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு யாழ்பாணம் தமிழ் அமைப்புகள் இணைந்து நற்றமிழ் செல்வர் விருது வழங்கி கெளரவித்தது.
Leave a Reply