கடவுள் விளக்கம் தேவை?
(1) கேள்வி : கடவுள் விளக்கம் தேவை?
பதில் : பல்வேறு உபநிடதங்களையும் வெவ்வேறு அறிவுசார் நூல்களையும் நன்கு கற்றுணர்ந்து தன்னுணர்த்தலே இதற்கான வழி. நல்ல குருவும் வாய்க்க வேண்டும். நல்ல அறச்சிந்தனைகளை மனதில் விதைத்து, இயம நியமங்களுடன் தன்னை இழத்தலே கடவுளைக் காண ஆகச் சிறந்த வழியாகும், இதை விளக்க முடியாது.
நானும் ஒரு பயணியாக இருப்பதால், எனவே, வள்ளுவர் சொன்னதைப் போல் ”தனித்தும், சேர்ந்தும் மற்றும் இயக்கியும் இருக்கக்கூடிய ஒரு நிலையே/தன்மையே கடவுள்” எனத் தெளிக.
(2) கேள்வி : அதெப்படி தனித்தும், சேர்ந்தும் இயக்கியும் ஒரு பொருள் / தன்மை இருக்க முடியும்?
பதில் : ஒரு சிறு விளக்கத்துடன் பார்ப்போம். அ என்கிற எழுத்து அனைத்து எழுத்துகளுக்கெல்லாம் அடிப்படையான ஒன்று. மூலமே அது தான். அப்படிப்பட்ட எழுத்து அ எனத் தனியாகவும், அம்மா, அப்பா, அவை எனப் பிற எழுத்துக்களுடன் சேர்ந்தும் அவற்றை இயக்கியும் வருதலால் தான் வள்ளுவர், அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் காண்பிக்கிறார் தனது அகர முதல எனும் குறளில்.
புரிந்திருக்கும் என நினைக்கிறன், எனினும் இன்னும் சற்று எளிமையாகப் பார்ப்போம். 100 ரூபாயில், ஒரு ரூபாய் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பதே பதிலாகும். ஆனால், 100 ரூபாய் 1 ரூபாயா எனக் கேட்டால், இல்லை என்பதே பதிலாகும். எவ்வாறு 1 ரூபாய் என்பது தனித்தும், 100 ரூபாயுடன் உள்ளும், மற்றும் அதை செலுத்தியும் உள்ளதோ, இறை தன்மையும் அதைப் போலவே.
ஸ்ரீலஸ்ரீ ஷண்முகம் சுவாமிகள்,
காஞ்சிபுரம்.
Leave a Reply