தீர்மானங்களைத் தீர்மானிப்போம்! நமது தீர்மானங்களே நம்மைத் தடுக்கிறது. நாம் நினைப்பதைச் செய்வதா இல்லை நம் நலவிரும்பிகள் சொல்வதை செய்வதா?

Share Button

நமது தீர்மானங்களே நம்மைத் தடுக்கிறது. நாம் நினைப்பதைச் செய்வதா இல்லை நம் நலவிரும்பிகள் சொல்வதையா. எப்பொழுது அவர்களின் ஊடாக பயணிக்கவேண்டும் எப்பொழுது பயணிக்க கூடாது.

எப்படி தவறான வேலை செய்வதை தவறான தருணத்தில் உணர்வது தவறோ அதேபோல் நாம் செய்வது சரியானதுதான் என சரியான நேரத்தில் உணர்தலே சரி. நாம் நமது சிந்தனையை சற்று புத்தாக்கத்திற்கு உட்படுத்தி எது சரி எது தவறு என சிந்தித்துத் தெளிவோம். இது நாம் எப்போதும் நல்லவர்களாகவும்,

அப்படி இருப்பதில் சிரமமில்லாமலிருக்கவும் உதவும்.

சந்தோஷமாக வாழ்வது மட்டும் இங்கு முக்கியம் இல்லை. எப்பொழுதும் சரியான பாதையில் நடக்கவேண்டும் என்பதே மிக முக்கியம். நாம், நம்மை, நமக்கு வசதியான மற்றும் தைரியமான நிலைக்கு தகுதிப்படுத்திக்கொள்ளும் முன், நமது மனதை எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்கத் தயார்படுத்த வேண்டும்.

வெற்றியை மட்டுமே ருசிக்கக் கொடுத்தால் தோல்வி ஏற்படும்போது கசப்பு அடர்த்தியாகும். ஆகையால் தோல்வியையும் பழகு. இன்று சற்று கதையிலிருந்து விலகி வேறொரு கோணத்தில் நம்மை செதுக்குவோம். கதையுடன் இதையும் பழகுவோம்.

உங்களை வெற்றிகரமானவராக கருதுகிறீர்களா? அப்படியானால், ஏன்? இல்லையென்றால், ஏன்?. உங்களை
வெற்றியாளர்களாக நீங்கள் கருதுவது என்பது உங்கள் உணர்வா அல்லது உங்களுடைய தீர்மானமா? அல்லது மற்றவர்கள் சொல்வதுவா? .நிச்சயமாக இது உங்களின் கருத்தியலே அன்றி மற்றவர்களின் கூற்று இல்லை.

மற்றவர்கள் உங்களின் வெற்றியை ஆமோதித்தால் அது உங்கள் செயல்களுக்காக அவர்களின் அங்கீகாரமே அன்றி வேறில்லை. வெற்றி என்பது எவ்விதத்திலும் அதன் பயனைப் பெறுபவர்களின் பதிலைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆகையால் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் செய்ய வேண்டும். நாம் எதிர்பார்க்கும் வெற்றிக்கு வழியைத் தொடர்ந்து வைத்துக் கொள்ளும் வகையில் அங்கீகாரம் மற்றும் வழிப்படுத்துதல் முறைமை அவசியம்.

சரி, நாம் தீர்மானங்கள் எப்படி நம்மைத் தடுக்கிறது எனப் பார்ப்போம். ஒரு ஊரில் மிகவும் பழமையான இடியும் நிலையில் ஒரு கோவில் இருந்தது. மக்கள் யாரும் அக்கோவிலுக்கு வருவதேயில்லை. மக்களை வரவழைக்க கோவில் நிர்வாகம் வண்ணம் அடித்து மெருகேற்றியது, இருந்தும் யாரும் வரவில்லை.

பிறகு அனைவரும் ஒன்றுகூடி 4 தீர்மானங்களைப் பிறப்பித்தார்கள்.

1. பழைய கோவிலை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கோவிலைக் கட்டுவோம்.
2. பழைய கோவிலின் அஸ்திவாரத்தின் மேலேயே புதிய கோவிலைக் கட்டுவோம்.
3. இடிக்கும்போது, பழைய கோவிலின் கதவுகள் மற்றும் பிற பயனுள்ள பொருள்களையே புதிய கோவில் கட்டும்போது உபயோகித்துக்கொள்வோம்.
4. புதிய கோவில் கட்டும்வரை பூஜை மற்றும் பிற விசேஷங்கள் பழைய கோவிலிலேயே தொடரும்.

முரண் புரிந்தால் வெற்றி நிச்சயம். மீண்டும் 4 தீர்மானங்களைப்படியுங்கள்…

இன்னும் தொடரும்…

 

 

நா. சௌரிராஜன்,

தன்முனைப்புப் பேச்சாளர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “தீர்மானங்களைத் தீர்மானிப்போம்! நமது தீர்மானங்களே நம்மைத் தடுக்கிறது. நாம் நினைப்பதைச் செய்வதா இல்லை நம் நலவிரும்பிகள் சொல்வதை செய்வதா?”

  1. Anandmurugan says:

    I think this article didn’t get released for the past 2 weeks. This is an excellent one as usual.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *