கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ் ஹைக்கூ நூல் முதல் முறையாக அமெரிக்கா நாட்டில் வெளியிடப்பட்டது; “மட்சுவோ பாஷோ விருது” வழங்கி கௌரவித்தனர்!

Share Button

அமெரிக்கா :-

கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ் ஹைக்கூ நூல் முதல் முறையாக அமெரிக்கா நாட்டில் வெளியிடப்பட்டது; – “மட்சுவோ பாஷோ விருது” வழங்கி கௌரவித்தனர்!

அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகம், இந்தியனாபொலிஸ் – அக்டோபர் 2 ஆம் நாள் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

முன்னதாக குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கினர். விழாவில் பனையோலைக் காற்றாடிகள் எனும் தமிழ் ஹைக்கூ நூல் முதலாவதாக அமெரிக்கா நாட்டில் வெளியிடப்பட்டது.

முற்றத்து நிலவொளி எனும் நூலும் வெளியிடப்பட்டது. நூல்களை அமெரிக்கா முத்தமிழ் பல்கலை வேந்தர் முனைவர் தாழை இரா.உதயநேசன் அவர்கள் வெளியிட இந்தியான தமிழ்ச்சங்க தலைவர் திரு.சத்தியா அவர்களும் Edify Technology CEO திரு.சிவா மூப்பனார் அவர்களும் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

முன்னதாக கல்வாரி லுத்தரன் தேவாலய பாதிரியார் குர்ட் எபோர்ட், அவர்களின் இறைவேண்டல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டன.

புரவலர் ஜெபிரி அலெக்சாண்டர் அவர்கள் தொடக்க உரையாற்றியதும் மேடையில் குமாரி அவர்களின் பாரதநாட்டியம் , சிறுமி பிரணீதா அவர்களின் பரதநாட்டியம் நிகழ்வு நடந்தது.

விழாவில் முத்தமிழ் பல்கலைவேந்தர் தாழை இரா.உதயநேசன் அவர்கள் தமது தலைமையுரையில் “கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ் ஹைக்கூ நூல் இன்று அமெரிக்கா நாட்டில் முதன் முதலில் வெளியிடப்படுகிறது.

அதுவும் அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக் கழகத்தில் என்னும் போது எங்கெளுக்கெல்லாம் பெருமை” என்றும் “ உலகெங்கும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் தடம்பதித்து வருவதோடு தமிழ் கலாச்சாரம், மண் சார்ந்த மரபுகளை பறைசாற்றி வருகின்றன.

ஏராளமான ஹைக்கூ கவிஞர்கள் தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகம் விரைவில் திருச்சியில் நடத்தும் விழாவில் ஹைக்கூ கவிஞர்களுக்கு விருதுகள் கொடுத்தான் அவர்களது கவிதைகளைத் தொகுத்து நூலொன்றும் வெளியிடவுள்ளது என்றும் கூறினார்.

இம்மிகிரேஷன் ஆலோசகர் வழக்கறிஞர் திருமதி மேரி கென்னடி, சி ஐ எம் இயக்குனர் டாக்டர் மார்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதியும் புத்தகங்கள் வெளியிட்டும் சாதனைபுரிந்துள்ள முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “மட்சுவோ பாஷோ விருது ” வழங்கப்பட்டது.

மேடையில் கவியருவி முனைவர் ஆரூர் தமிழ்நாடன், கவிஞர் மு.முருகேஷ், முனைவர் சரஸ்வதிபாஸ்கரன், முனைவர் ஜோ.சம்பத்குமார், அமெரிக்கா முத்தமிழ் பல்கலை ஹைக்கூ பேரவை நிர்வாகி ரேணுகா ஸ்டாலின், ஹைக்கூ இளம் ஆய்வாளர் கவிநயஸ்ரீ, அமெரிக்கா முத்தமிழ் சிறுவர் பேரவை உறுப்பினர் ஹரிணி கவியரசு ஆகியோரின் காணொளி வாழ்த்தரங்கம் திரையிடப்பட்டது.

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் சார்பில் அமெரிக்கா பல்கலை வேந்தர் தாழை இரா உதயநேசன் அவர்களுக்கு “முத்தமிழ் காவலர் ” விருது வழங்கப்பட்டது.

விழாவில் நூலாசிரியர் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.

இன்சுவை இரவு விருந்து அற்புதமாக பல்கலைக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களது குடும்பத்தினர் மற்றும் இந்தியானா பொலிஸ் வாழ் தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்த அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக் கழகம் நிர்வாகிகளுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *