பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசனின் 2022 ஆம் ஆண்டின் புதிய தீர்மானங்கள்
பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசனின் 2022 ஆம் ஆண்டின் புதிய தீர்மானங்கள் :
2022 – தீர்மானம்
1) இந்த வருட ஐபிஎல் போட்டி எனது யூ டியூப் தளத்தில் அனைத்து போட்டிகளிலும் ஜோதிட கணிப்பை வெளியிடுவது, மற்றும் இந்தியா அணி விளையாடும் சர்வதேச போட்டிகளில் கணிப்பை நமது யூட்யூப் தளத்தில் வெளியிடுகிறேன்.
2) கடந்த நான்கு ஆண்டுகள் போல மூன்று மாதத்திற்கு ஒரு முறை தனிநபர் ஜாதகத்தை புக் செய்துவிட்டு.
உடல் அசவுகரியம், தொழிலில் ஏற்படும் சிறுசிறு தொந்தரவுகள், மேலும் பல்வேறு தவிர்க்கமுடியாத இழப்புகள், துக்க நிகழ்வுகள், மருத்துவ காரணங்கள், குடும்ப நிகழ்வுகள், திருமணங்கள் என்ற காரணத்திற்காக தள்ளித் தள்ளிப் போடப்பட்டு மாதக்கணக்கில், வாரக்கணக்கில் தள்ளி வந்ததை, இனி எந்த காலத்திலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள போகிறேன்.
3) ஒரு மாதத்திற்கு தேவையான தனிநபர் ஜாதகத்தை எடுத்து விட்டு, அந்த மாதம் முடிவடைவதற்குள் அனைத்தையும் முடித்துவிட்டு. ஏதேனும் காரணத்தால் முடியாமல் போனால் அடுத்த மாதத்தின் முதல் ஐந்து தேதிகளுக்குள் முடித்துவிட்டு மீண்டும் அடுத்த மாதம் புதிதாக தனிநபர் ஒப்பந்தம் எடுக்கப் போகிறேன்.
4) அனைத்து அழைப்பை ஏற்றுக்கொண்டு தவிப்பதை விட என்னால் முடிந்த அளவு எனக்கு பழகியவர்கள் நெருக்கமான அவர்களுடைய அழைப்பை மட்டும் ஏற்று மற்றதை தவிர்க்கப் போகிறேன் .
‘ அனைத்தையும் ஒப்புக்கொண்டு தவிப்பதை விட, சிலரைத் தவிர்த்து நிம்மதியாக இருக்கப் போகிறேன்.
5) எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த ஆண்டு முழுவதும் நடைபெறும் ராகு – கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, மேலும் அதிசார சனி பெயர்ச்சி, தமிழ் புத்தாண்டு, ஆகிய பலன்களை முதலில் எனது யூடியூப் தளத்தில் கொடுக்கப் போகிறேன்.
6) குறைந்தது குழந்தைகளுக்கான பள்ளிகள் திறந்த பிறகு ஜோதிடம் பற்றிய பல புரியாத புதிர்களுக்கு எனக்குத்தெரிந்த விளக்கத்தை அதிக காணொளிகள் ஆக தரப்போகிறேன்.
7) பொதுவாக மக்களுக்கு பயன்படுத்தக் கூடிய பல்வேறு முகூர்த்தங்கள் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் மாதமும் தேதிகளில் முதல் இரண்டு நாட்களில் கொடுக்கப் போகிறேன்.
ஜோதிட ஆர்வலர்கள் மற்றும் ஜோதிட மாணவர்களுக்கு எனக்கு தெரிந்த அறிவை குழந்தைகளுக்கான பள்ளிகள் திறந்த பிறகு இலவசமாக யூடியூப் தளத்தில் உண்மையாக வழக்கம்போல தேர்தலில் காணொளிகளில் வருவதுபோல ஜாதகத்தை மாற்றாமல், உண்மையான ஜாதகத்தை போட்டு சில விளக்கங்கள் பொதுமக்களுக்கு பயன்படுத்தக்கூடிய திருமணம் மற்றும் தனிநபர் முன்னேற்றம் பற்றிய தகவல்களுக்கு உண்மையான விதிகளை சொல்லப்போகிறேன்.
ஆனால் விளையாட்டுப்போட்டி, தேர்தல் கணிப்பு , குதிரை பந்தயம் மற்றும் உலகியல் ஜோதிடக் கணிப்புகளை வழக்கம்போல ஜோதிடத்தை திருத்தம் செய்து யாருக்கும் புரியாத வண்ணம் பலன்களை மட்டும் தெளிவாக சொல்லி, ஜாதகத்தையும் விதிகளையும் மாற்றி சொல்லி குழப்ப போகிறேன்.
9) முடிந்தவரை யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க பார்க்கிறேன். இது நடக்க வேண்டும் என்றால் யாரும் என் நிலையை புரிந்து கொண்டு முடிந்தால் பார்க்கிறேன் , இல்லை என்றால் சில காலம் காத்திருக்க சொல்கிறேன் அதுவரை பொறுமையாக இருங்கள் .
யாரிடமும் சொல்லி எனக்கு அழுத்தம் கொடுத்து என்னுடைய திட்டத்தை குழப்பி விடாதீர்கள். நான் ஒரு நாளைக்கு இத்தனை என்று ஒரு திட்டம் போட்டு வைத்துள்ளேன் அதை முக்கிய நபர்கள் மூலமாக அழுத்தம் கொடுத்து .
நீங்கள் விரைவில் பார்த்து முறையாக வரும் நபர்களுக்கு தள்ளிப்போக வைத்து எனது வழிமுறைகளை எனது திட்டத்தை மாற்றம் செய்யாதீர்கள்.
மீறி அப்படி யார் மூலமாக அழுத்தம் கொடுத்தீர்கள் என்றால் மேலோட்டமாக பார்த்து பலன் சொல்ல போகிறேன்.
இது அனைத்தும் எனது நன்மைக்காகவும், என்னை நம்பி வரும் வாடிக்கையாளர்கள் நன்மைக்காகவும், என்னை ஒரு பொருட்டாக பின்தொடரும் எனது அருமை நண்பர்களுக்கும் , பின்தொடர்பவர்களுக்கு இன்று முதல் நேரத்தை ஒதுக்க திட்டமிட்டுள்ளேன் .
தயவுசெய்து முக்கிய நபர்கள் மூலமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் .
நீங்கள் அப்படி அழுத்தம் கொடுத்தீர்கள் என்றால் நான் மேலோட்டமாக பலன் சொல்லப் போகிறேன் நஷ்டம் உங்களுக்குத்தான்.
இது நடக்க வேண்டுமென்றால் நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் நிச்சயமாக இந்த ஆண்டு முதல் நல்லதொரு மாற்றமாக இருக்கட்டும்.
முடிந்தால் ஏற்றுக்கொள்கிறேன், மேலும் எப்போது முடிக்க முடியும் என்று உத்தேசமான ஒரு தேதியை சொல்கிறேன்.
முடியவில்லை என்றால் அப்போதே முடியவில்லை என்று சொல்லிவிடுகிறேன் (நீங்கள் வேறு நபர்களிடம் உடனடியாக பார்த்து உங்கள் பிரச்னையை போக்கி கொள்ளலாம்).
உங்கள் நேரத்தை நான் வீன் செய்யமாட்டேன். இந்த ஆண்டு முதல் ஒரு நல்ல மாற்றமாக இருக்கட்டும்.
Leave a Reply