சென்னை :-
ஆந்திரா மாநிலத்தில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில் தாய்மொழிக்கு முக்கித்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறித்தினார்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் நவீன கல்விக்கான மோட்டூரி சத்தியநாராயணா மையத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில், சென்னை கிண்டி ராஜ்பவனில் இருந்து ஆன்லைன் வழியாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பங்கேற்றார். அந்த மையத்தை திறந்துவைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு.
மொழியின் மகத்துவம்
மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரும், தோழருமான மோட்டூரி சத்யநாராயணா, வாழ்க்கையின் அனைத்து மட்டத்திலும் இந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியவர்களில் முக்கியமானவர் ஆவார். இந்தி மொழியை தென்னிந்தியாவில் பரப்புவதை தமது வாழ்நாளின் முக்கியப் பணியாக கருதி செயல்பட்டு வந்ததுடன், பல்வேறு வெளியீடுகள் மூலம், அவரது தாய்மொழியான தெலுங்கையும் ஊக்குவித்து வந்தார். தெலுங்கு மொழி சமிதியின் நிறுவன செயலாளராகவும் அவர் இருந்தார்.
இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்கவேண்டும்
இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்கவேண்டும். குறிப்பாக, நமது தாய்மொழிக்கு, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். நமது கலாச்சார பாரம்பரியத்தில், மொழி ஒரு மிக முக்கியமான அம்சம் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். மொழிதான் நமக்கு அடையாளம், சுயமரியாதையை வழங்குவதோடு, நாம் யார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. எனவேதான், உங்களது தாய்மொழியில் பேசுவதை பெருமையாகக் கருதுங்கள் என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
Exactly