டெல்லி :-
பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு.
பிரதமர் மோடியுடன் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 3 நாள் பயணமாக புதுடெல்லி சென்ற தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராஜ் அங்கு நடந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி அலுவலகத்துக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டார்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
தெலுங்கானா மாநிலத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதால் மாநிலத்துக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக 21 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.