பாரதத்தின் 70 ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு, தலைவர்கள் போல் வேடமணிந்து விழிப்புணர்வு

Share Button
பாரதத்தின் 70 ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஸ்ரீ விநாயகா பள்ளி மற்றும் PSG பப்ளிக் பள்ளி மாணவர்கள் தலைவர்கள் போல் வேடமணிந்து சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாறு, மாணவர்களின் கோலாட்டம், ஒயிலாட்டத்துடன் பம்பை இசைக் கலைஞர்களின் மாடு, மயில் நடனத்துடனும் பம்பை இசை நிகழ்ச்சியுடன் காவேரிபட்டினம் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது.
இந்த குடியரசு தின விழா ஊர்வலத்தை காவேரிபட்டினம் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் தொடங்கி வைத்தார். விதைகள் அமைப்பின் தலைவர் திரு அசோக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். காவேரிப்பட்டினம் ஜேசீஸ் சங்க உறுப்பினர்கள் மரக்கன்றுகளை வழங்கியும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.
இந்த ஊர்வலத்தை பள்ளியின் நிர்வாகி திருமதி கீதா கணேசன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஊர்வலத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் பள்ளியின் சார்பில் குடியரசு தின விழாவை பற்றிய செய்தியை விநியோகம் செய்தனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *