10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி
மாணிக்கம்பாளையம், நாமக்கல் :-
நாட்டு மக்களை அச்சுறுத்திகொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும், முழு ஊரடங்குகளும் அவ்வப்போது தமிழக அரசு அறிவித்து பலவழிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, பள்ளி கல்லூரிகள் தனது இயல்பான கல்விப்பணியிலிருந்து சற்றே முடங்கிப்போயின. இதனால் மாணவர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கல்வி ஒரு கேள்விக்குறியாகவே போய்விடுமா என்ற அச்சவுணர்வும் பெற்றோர்களின் மத்தியில் நிலவியது. ஆனால் தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிட்டத்தக்கது.
இந்நிலையில் தான் தமிழக அரசு ஒரு ஒரு முடிவை எடுத்தது. தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அனைத்து வகையான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றியும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் மீண்டும் பள்ளி கல்லூரிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது.
உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர், மாஸ்க், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவைகளை சரி பார்த்தபின்னரே மாணவர்களை பள்ளிக்குள் அனுமதித்தனர்.
இந்நிலையில் பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான மாணவியை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் வேளையில் 3 ஆம் அலை, 4 ஆம் அலை என்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த கொரோனாவிலிருந்து நாம் எப்போதுதான் மீள்வோம் என்று வேதனையில் நாட்டு மக்கள் ஒரு அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் இழந்து மிகவும் சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டு மக்களை மீட்க தமிழக அரசு பல கட்டங்களில் முனைப்புடன் ஊரடங்குகளை அறிவித்தும், அவ்வப்போது தளர்வுகளை அறிவித்தும் தக்க நடவடிக்களை மேற்கொண்டு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது தமிழக அரசு.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் உயிர்களை காத்திடும் வகையில் மேலும் உரிய நடவடிக்கைகளை எடுத்து நாளைய தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களின் உயிர்களை காத்திடவும், பெற்றோர்களின் மனஉளைச்சலை போக்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுபேற்றிருக்கும் இப்போதிருக்கும் தமிழக அரசு மாணவர்களின் உயிர்களை பாதுகாத்திட வேண்டுமாய் இச்செய்தியின் வாயிலாக தமிழக அரசை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
புதுவரவு.காம் செய்தி பிரிவு
Leave a Reply