மாயமான நேபாள விமானம் : 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நிலையில் தொடர்பு துண்டிப்பு!
பொக்ரா விமான நிலையம், நேபாளம் :
மாயமான நேபாள விமானம் : 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நிலையில் தொடர்பு துண்டிப்பு!
இன்று காலை நேபாளத்தில் உள்ள பொக்ரா விமான நிலையத்தில் இருந்து 22 பேருடன் ஒரு சிறு விமானம் ஜொம்ஸம் நோக்கிச் சென்றுள்ளது. நான்கு பேர் இந்தியர்கள். மற்றவர்கள் நேபாளிகள், ஜப்பானியர்கள் ஆகியோர் விமானத்தில் பயணம் செய்தனர்.
தாரா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் இது. காலை 9.55 மணிக்குக் கிளம்பிய விமானம், 10.15-க்கு ஜொம்ஸம் ஏர்போர்ட்டில் இறங்க வேண்டும். ஆனால், ஒரு சில நிமிடங்களுக்கு முன் கண்ட்ரோல் அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
விமானம் எங்கே என்று தேடும் பணியில் உள்ளனர் நேபாள அரசாங்கத்தினர்!
முக்திநாத் யாத்திரை செல்ல வேண்டியவர்கள் பொக்ரா விமான நிலையத்தில் இருந்து ஜொம்ஸம் விமான நிலையத்துக்கு 20 நிமிடம் பயணித்து சென்றால், சுலபம். ஒருவேளை சீதோஷ்ண நிலை கருதி விமானம் கேன்சல் ஆகி விட்டால், மலைப் பாதை வழியே 12 மணி நேரம் பயணிக்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் பல தனியார் தொலைக்காட்சிகளில் ஆன்மிக சொற்பொழிவாற்றும் திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் இதே பொக்ரா விமான நிலையத்தில் இருந்து ஜொம்ஸம் விமான நிலையத்துக்கு சம்மிட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான சிறு விமானத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து, ரிடர்ன் ஜர்னியும் இதே விமானத்தில் திரும்பியது குறிப்பித்தக்கது.
My prayers for their safety return. Periyava Charanam