கடன் தொல்லை நீங்க, செல்வ வளம் பெருக, பண வரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள் அனைத்து சரியாகிவிடும்

Share Button
மிளகு பரிகாரம் :-
ஞாயிற்றுக்கிழமை இந்த 1 பொருளை மட்டும், உங்கள் தலையை இப்படி சுற்றி போடுங்கள் போதும். கடன் கஷ்டம் அனைத்தும் நீங்கி வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது மிளகு. 11 மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் பயமில்லாமல் உண்ணலாம் என்பது பழமொழி. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட இந்த மிளகுக்கு எதிர்மறை ஆற்றலையும் முறிக்கக் கூடிய தன்மை இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் பகைவர்களுடன் பழகும் போதும், எதிரி நாட்டிற்கு செல்லும் போது தங்களுடன் கண்டிப்பாக இந்த மிளகினை எடுத்துச் செல்வார்களாம். காரணம் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அவர்கள் சாப்பிடக்கூடிய உணவில் ஏதேனும் விஷம் கலந்து விட்டதாக உணர்ந்தால், அந்த மிளகை எடுத்து சாப்பிட்டு விட்டால் உடம்பில் இருக்கும் விஷம் முறியடிக்கப்படும்.
அவர்களுடைய உயிரும் பாதுகாக்கப்படும். ஒரு பாதுகாப்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக அந்த காலத்தில் ராஜாக்கள் அவர்களுடைய கையில் எப்போதுமே மிளகினை வைத்திருந்தார்கள்.
இப்படி விஷத்தை முறிக்கக் கூடிய இந்த மிளகிற்கு எதிர்மறை ஆற்றலை நெருங்க விடாமல் பாதுகாக்க கூடிய சக்தியும் அதிகமாகவே உள்ளது.
ஒரு வெள்ளைத் துணியில் 5 மிளகினை கட்டி எப்போதுமே நம்முடைய கையிலோ, பாக்கெட்டிலோ வைத்துக்கொள்வது மிக மிக நல்லது. மிளகு கெட்டுப் போகக் கூடிய பொருள் அல்ல. மூன்று மாதத்திற்கு ஒருமுறை பழைய மிளகை மாற்றி வைத்து கொண்டாலும் சரி தான். இந்த சிறிய மிளகு முடிச்சு நமக்கு ஒரு பாதுகாப்பு வட்டத்தை ஏற்படுத்தி தரும்.
மிளகை எப்படி பயன்படுத்தலாம் :
அடுத்தபடியாக கடன் பிரச்சினை தீரவதற்கும், பண வரவு அதிகரிப்பதற்கும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகுவதற்கும், மிளகை எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு 11.30 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்.
நான்கு மிளகை எடுத்துக்கொள்ளுங்கள். நிலை வாசலுக்கு வெளியே சென்று விடுங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி உங்கள் கையில் இருக்கும் மிளகை உங்களுடைய தலையை இடது புறமாக மூன்று முறை மட்டும் சுற்றுங்கள்.
நான்கு மிளகையும் நான்கு திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள் அவ்வளவுதான்.
திரும்பிப் பார்க்காமல் குளியல் அறைக்கு வந்து கை கால் முகத்தை கழுவிக்கொண்டு உறங்கச் சென்று விடுங்கள்.
இப்படி இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் அந்த மிளகோடு போய்விட வேண்டும்.
கடன் அனைத்தும், இந்த மிளகு காணாமல் போவது போல கண்ணுக்கே தெரியாமல் போய்விட வேண்டுமென்று பிரபஞ்சத்திடம் சொல்லி மிளகை தூக்கி எறிந்து விடுங்கள்.
நிச்சயமாக மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் விமோசனம் கிடைக்கும். அதே சமயம் கடன் பிரச்சனை தீர்வதற்கான பல வழிகளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டி கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனைப் பெறலாம்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.