நான் பெண்ணாக பிறந்தது பாவமா? கண்ணம்மா!
அடுத்த ஜென்மத்தில்
ஆணாக பிறக்க வேண்டும்!
வலிகளை தாங்கியேனும்
வலிமையோடு நகர்ந்திருப்பேன்
கனவுகளை சுமந்தேனும்
கடலை நோக்கி ஓடிருப்பேன்!
தகப்பன் ஆகிருந்தேனும்
தவறாமல் வென்றுருப்பேன்
வறட்சி தேங்கினேனும்
வறண்டாலும் பெருகியிருப்பேன்!
கட்டுண்டு கடந்தேனும்
காட்டாறாய் நண்பர்களாக்கிருப்பேன்
கனவை பிடித்திருப்பேன்
கானலை தகர்த்திருப்பேன்!
ஏனோ பெண்ணாக பிறந்தேன்?
கனவை ஒடுக்கினீர்
வலிகளை பெருக்கினீர்
கதறி எழுதால் காட்டேரி என்றீர்
திமிர முயன்றால் திமிரு என்றீர்
லட்சியத்தில் பெருகி ஓட நினைத்தால்
கையில் தொடப்பத்தை கொடுத்தீர்
மீண்டு ஓடினால் காலில் சூடு வைத்தீர்
சாக ஓடினினும் சமையலறைக்குள் தள்ளினீர்
நான் பெண்ணாக
பிறந்தது பாவமா?
எனக்கும் கனவுகள் இருக்க கூடாதா
ஒவ்வொரு முறையும்
வெற்றிகரமாக தோற்றுப்போகிறேன்
பெண்ணாக பிறந்ததினால்
இறைவா!
அடுத்த ஜென்மம் ஒன்றியிருந்தால்
என்னை ஆணாக பெற்றுவிடு!
கண்ணம்மா!
Leave a Reply