உலக ஞான சித்தன் கூட தன்னை அவதாரம் யென்று கூறலையே!
உலக ஞான சித்தன் கூட தன்னை
அவதாரம் யென்று கூறலையே மானுடா
உன் கர்மத்திற்க்கு பூசை செய்யும் உன்
மதி கூட இன்னும் போகலையே மானுடா
முன்வினை அழுக்கு ஒன்று பின்வினையாய் துரத்துதடா மதிவிதி அறியா மானுடா
புறவித்தை பாழ்வினையே சிவனை அறியா உன் ஐம்புலனும் பாழ்வினையடா மானுடா
ஏட்டினை படித்து ஏகனனெ கூறுவதும் பாட்டினை படித்து சித்தனென கூறுவதும்
சித்தியில்ல பாழ்மனமடா மானுடா
அறிந்தை கூறி சிவமாகு அறிய கூறி குருவாகு மானுடா
வீணான சடையும் விளங்காத உடையும் சித்தம் இல்லையடா மானுடா
உன்னை சீராக்க்கி கொண்டால் நீயே சிவனென அறியும் சித்தியும் நீயடா மானுடா
பணபித்தால் தீவினையாகதே குறி சொல்லி குடியை கெடுக்காதே மானுடா
மாயையில் ஆடி மாண்டுதான் போகாதோ தேவைக்கு ஆடி பரமன்னென கூறாதே மானுடா
ஊழ்வினை அத்துனையும் ஊன் உடலை அழிக்குமடா மதியில்லா மானுடா
ஐந்தினை மூன்றும் மூன்றினை ஆறும் ஆளும் சூத்திர சித்தியடா மானுடா
அறியா பிள்ளையடா அறிந்தால் நீ இந்த சீவனுக்கு சீவ முக்தியடா மானுடா
– பிரபு அதோமுகன்
Leave a Reply