காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் கிறிஸ்துமஸ் விழா!
காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் கிறிஸ்துமஸ் விழா! காலனிகள், உபகரணங்கள், விருந்து வழங்கப்பட்டது. கோட்டாட்சியர் எஸ்.கணேஷ் வாழ்த்து. வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட கிளையின் சார்பில் தமிழக அரசின் சமூகபாதுகாப்பு துறையின் குழந்தைகள் காப்பகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அவைத்தலைவர் த.வ.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். அவை துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
செயற்குழு உறுப்பினர்கள் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், கே.ஜான்சன்வசந்தகுமார், ஆயுள் காப்பீட்டு கழக வளர்ச்சி அதிகாரி ஜவகர், கரிகிரி எ.ஜெ.சாம்ராஜ், ஐடாஸ்டர் பள்ளியின் துணை முதல்வர் ஐடாஆனி, சாமுவேல் ஆகியோர் சார்பாக அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், செயலாளர் செ.நா-ஜனார்த்தனன் ஆகியோர் காப்பக மாணவிகளுக்கு இலவச காலனி (செருப்புகள்), மதிய விருந்து, கணித உபகரண பெட்டிகள் வழங்கினர்.
மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எல்.ரவிச்சந்திரன், எம்.பிரபு, திருநாவுக்கரசு, டி.லிவிங்ஸ்டன் மோசஸ், கே.ஜான்சன்வசந்தகுமார், சாமுவேல், ஜிலானி ஆகியோர் வாழ்த்தி பேசினர். வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தலைவர் எஸ்.கணேஷ் மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
(செ.நா.ஜனார்த்தனன், செயலாளர், 9443345667) படவிளக்கம் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கு காலனிகள், கணித உபகரண பெட்டிகளை காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன்,செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஆகியோர் வழங்கிய போது எடுத்தப்படம் உடன் துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, பொருளாளர் வி.பழனி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் லிவிங்ஸ்டன் மோசஸ், ஜான்சன்வசந்தகுமார், திருநாவுக்கரசு, எல்.ரவிசந்திரன், எம்.பிரவு, சாமுவேல், ஜிலானி ஆகியோர்.
Leave a Reply