ராட்சசி – படம் இருமுறை பார்த்துவிட்டேன். அப்படத்தின் தாக்கம் பொது மக்களிடம் எப்படி உள்ளது என்பதை காண்பதற்கே! சிறுவனுடன் உரையாடும் ஆசிரியரின் அன்பு ரசிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மெமோ …சஸ்பன்சன் வழங்கும் போது பொதுமக்கள் கை தட்டுகின்றனர். காலை பிரார்த்தனையில் ஆசிரியர்கள் குழந்தைகளுடன் நடனமாடுவது கண்டு வாய்பிளக்கின்றனர். இது சாத்தியமில்லை என முகம் சுளிக்கின்றனர்.
“பாம் வைக்கலையா” என உதவி த ஆ கேட்ட போது… வில்லன் ஒரு அறை விட்டு , அந்த இடத்தை கழுவி விடு எனக் கூறும் போது பலத்த கைத்தட்டல் விழுகின்றது…ஒவ்வொரு முறை புதுமை புகுத்தும் போது நம் பள்ளிக்கும் இப்படி த ஆ தேவை என மனம் ஏங்குவதை இன்ட்ரவல் உரையாடல் போது கேட்கிறேன்.
சார்ப்பான வசனம், தொய்வில்லா திரைக்கதை படத்தை சினிமா தனத்துடன் அதி அற்புதமாகப் பொது ஜன புத்திக்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் மோசமானவர்கள் எனக் கடத்தியுள்ளது. இந்த பிம்பத்தையும், முற்போக்கு ஆசிரியரின் கஷ்டங்களையும் மட்டுமே இத்திரைப்படம் பொதுமக்களிடம் நிலைக்க செய்துள்ளது.
இதற்கு பலமான எதிர்ப்பை தரும் அதேவேளையில் நமக்கு நாமே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். நமக்கு நாமே செயல்பாட்டாளர் எனச் சொல்லிக் கொள்வதை விட திடமாக இன்னும் உத்வேகம் பெற்று அனைத்து ஆசிரியரையும் ஒருங்கிணைத்து பள்ளியை முன்னேற்றுவதன் மூலமே அதற்கு பதிலடி தர முடியும்.
தயவு செய்து நமக்குள் ஒற்றுமை ஓங்கி, நீ பெரிது நான் பெரிது எனச் சண்டை போடாமல் ஒருங்கிணைந்து நம் பள்ளியை , நம் பகுதியில் உள்ள மாணவர் எண்ணிக்கை அரிகி வரும் பிற பள்ளிகளை தத்து எடுத்து முன்னேற்ற பாடுபடுவோம். இதுவே, இப்படத்திற்கான பதிலாக இருக்க வேண்டும். மகா போன்று செயல்பட முயல்வோம்.
இதில் மீடியா வெளிச்சம் எல்லாம் முக்கியமில்லை. தொடர் செயல்பாடு மீடியா நம் பக்கம் திசை திரும்பும். இது உண்மை. மகாவின் செயல்பாடே மிடீயாவை பேச வைத்தது் இந்த உண்மையை உணர வேண்டும்.
Leave a Reply