வருகின்ற பாராளுமன்ற தேர்தலின்போது ஒவ்வொரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளதாக நினைத்து தேர்தல் பணிகளை செய்ய வேண்டும்

Share Button
கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது வருகின்ற  பாராளுமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளதாக நினைத்து தேர்தல் பணிகளை செய்ய முன்வர வேண்டும் என கிழக்கு மாவாட்டத் தலைவர் சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் உத்தரவின்படி  மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சட்டமன்றத் தொகுதி வாரியாக பொதுக்கூட்டம் நடத்துவது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் அறிமுகம் கூட்டம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இந்தக் கூட்டத்தின் போது வருகின்ற பாராளுமன்ற தேரதலில் நமது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்திய பிரதமர் ஆவது உறுதி செய்யப்பட்டுவிட்டது, மோடியின் செயலை பொருக்க முடியாத மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க தயாரிகிவிட்டனர், ஆகையால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ராகுல் காந்தி தான் வேட்பாளர்கள் அன்று நினைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் இந்தக் கூட்டத்தின் போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மோடியின் மிகப் பெரிய ஊழல்களின் ஒன்றான ரபேல் ஊழல் குறித்து பிரச்சாரங்கள் மேற்கொள்வது என்றும், மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் செல்லக்குமாரின்  பிறந்தநாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது..
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மாவட்ட செயலாளர் சேகர், வட்டார தலைவர் ஷானவாஷ், மாவட்ட பொது பொது செயலாளர் சரவணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஆறுமுகசுப்பிரமணி ,மாவட்ட வர்தக காங்கிரஸ் தலைவர் முபாரக், மற்றும் லலித் ஆண்டனி, பாண்டுரங்கன், கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *