ஆவடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்வு!

Share Button
உலக யோக தினத்தை முன்னிட்டு ஸ்ரீ அம்மாபகவான் பவுண்டேசன் மற்றும் அபயம் பிட்பிரைன் அகாடமி சென்னை இணைந்து ஆவடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலகின் மாபெரும் பிரைன் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவர் திரு.க. இளம்பரிதி, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி திரு.பி. செந்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரு.இளமாறன் ஆகியோர் தலைமை ஏற்றினர்.
இந்நிகழ்ச்சி குறித்து அபயம் அகாடமி நிறுவனர் திருமதி உமாராணி விஜயகுமார் அவர்களை கேட்ட போது அவர் கூறியதாவது, உடலை திடமாக சில பயிற்ச்சிகள் உள்ளதுபோல் மூளையை அதீத திறனுடன் செயல்படுத்த சில யோக பயிற்ச்சிகள் உள்ளன எனவும் இப்பயிற்ச்சியின் மூலம் மாணவ மாணவிகள் எல்லா துறைகளிலும் சிறந்து விலங்க இப்பயிற்ச்சி அவசியம் எனவும் தெரிவித்தனர்.மேலும் முன்னாள் அரசு பள்ளி மாணவியான இவர் மக்களிடைய பிரைன் யோக பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் நோக்கத்திலும், நாம் நம் திறமைகளை கூட தானம் செய்ய முடியும் கல்வி தான விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் நோக்கத்திலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்ச்சி கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்து உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதில் சுமார்  2000 மேற்ப்பட்ட மாணவிகள் பங்கேற்று புதுவிதமான உலக சாதனை படைத்தனர்.
மேலும் ஆவடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசியரியை திருதி.பாமா அவர்கள் இந்நிகழ்ச்சியை நடத்த முன்வந்த ஸ்ரீ அம்மா பவன் பவுண்டேசன் அமைப்பிற்க்கும், கல்வி தானம் செய்ய முன்வந்த அபயம் அகாடமி நிறுவனர் திருமதி.உமாராணி விஜயகுமார் அவர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கும் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர்.குமரவேல் மற்றும் அவர்கள் குழுவினர் ஐகிரி, பிரவின்குமார் முருகன் அவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றினை தெரிவித்து கொண்டார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *