நாட்டு சுண்டைக்காய் அவசியம் சாப்பிடனும் ஏன் தெரியுமா?

Share Button

திருப்பூர் :-

நாட்டு சுண்டைக்காய் அவசியம் சாப்பிடனும் ஏன் தெரியுமா?

நாட்டு சுண்டைக்காய் செடிகளில் இயற்கையாக கிடைத்திடும் ஒரு வகையான மருத்துவக்குணம் கொண்டவை.

உணவே மருந்து

வாழும் காலங்களில், உணவே மருந்து என்பதை இயற்கை முறையில் எடுத்துக்கொள்வோம். நமது உடலில் தீராத நோயும் தீர்வுகாண எளிய முறையில் இயற்கை சார்ந்து விளைந்த செடி தானுங்க இந்த நாட்டு சுண்டைக்காய்ச் செடி. அச்செடியில் பூவிட்டு கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கிடும் காய் தான் சுண்டைக்காய்.

சுண்டைக்காயும் அதன் மருத்துவ குணமும்

இதன் மருத்துவ குணம் என்பது மனிதன் படைக்கப்பட்ட காலங்களில் இருந்து உணவே மருந்தாக பயண்படுத்தி வருவதுண்டு. இதன் முக்கிய பயன்கள் நம் கிராமங்களில் அனைவரும் பழைய சாதம், கம்பு, கேழ்வரகு, சோளம், சாமரசி, கோதும்பைகளி என உடலுக்கு ஆரோக்கியமான உணவாகும். இப்படி இயற்கையான முறையில் உணவை சாப்பிட்டு வரும் அந்த கால மனிதர்கள் யாவரும் இந்த சுண்டைக்காயை பறித்து நன்கு காயவைத்து அதை பதப்படுத்தி மோரில் ஊரவைத்து வெயிலில் மறுபடியும் காயவைத்து சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.

பின் வருடக்கணக்கில் வைத்து அப்பப்ப தேவைக்கு தகுந்தார் போல் வருத்து கஞ்சி சாதம் சாப்பிடும் போது இதனை தொட்டுக் கொண்டு தேனாமிருதம் போல் சுவைச்சு சாப்பிடும் காலமும் உண்டு.

இக்காலங்களில் இது போன்ற மருத்துவ குணம் சார்ந்த காய்களை நாம் உடலுக்கு சேர்த்துக்கொள்ள முன்வருவதில்லை என்பதால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றோம். இதனை முறியடிக்க நாம் வாழும் இடங்களில் கிடைக்கும் ஓருசில மூலிகை சார்ந்த காய்களில் சுண்டைக்காய் செடிகளில் கிடைக்கும் காய் சற்று கசப்பு தன்மையுடையதும் உண்டு.

இதனை நாம் தினம் தினம் மருந்தாக எடுத்துக்கொண்டால் பல வித நோய்களை குணப்படுத்த உதவிடும் எனவும் இப்போது தெளிவாகவே கூறிடலாம்.

வாங்க பார்ப்போம் சுண்டைக்காயின் மகத்துவத்தை

வேகாத உணவையும் விலங்காத காய்கறிகளையும் சாப்பிடுவதை விட, உடலுக்கு ஆரோக்கியமான பல வகை தானிய கஞ்சிகளையே பருகிடுவோம் அதற்கு ஏதுவாக சுண்டைக்காயைப் பறித்து குழம்பாகவும், அதையே காய வைத்து மண்பானைகளில் வைத்துக்கொண்டு தினம் வறுத்து சாப்பிடுவதால் உடலில் பல நோய்கள் குணமாகும் மகுத்துவமும் உண்டு.

நம் உடலில் உள்ள நோய்கள் இந்த சுண்டைக்காய் வத்தல் மூலம் குணமாவது. வயிற்றில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றுதல், குடல் புழு, பெண்களுக்கான மாதவிடாய், இப்படி பல வியாதிகளைக் குணப்படுத்தக்கூடிய மகத்துவமும் இந்த சுண்டைக்காய்க்கு உண்டு. நாமலும் தினம் தினம் உணவில் சேர்த்து சாப்பிடுவோம் உணவே மருந்து என்பதில் நாம் திடமான மன உறுதியை கையாள்வோம்.

சிவகாமி தெய்வராஜ்

போத்தம்பாளையம், திருப்பூர் மாவட்டம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *