கிருட்டினகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,000/- மதிப்புள்ள கல்விச்சீர்களை கிராம மக்கள் பள்ளிக்கு வழங்கினர்.
டேபிள், சேர், விளையாட்டு பொருட்கள், நோட்டு, பேனா, குடிநீர் டிரம் உட்பட பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையோடு மேளதாளத்தோடு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இதனை காவேரிப்பட்டிணம் வட்டார கல்வி அலுவலர் மரியாரோஸ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை கலைராணி ஆகியோர் பெற்றுக்கொண்டு, சீர்வரிசை வழங்கிய கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அரசு பள்ளிக்கு வழங்கி கல்விச்சீரால் மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply