டாஸ்மாக்கும், பிரியாணியும் காம்போ ஆபர் : தேர்தல் ஆணையம் அதிரடி!

Share Button
வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரை செலவின விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரப்புரைக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சமும், சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.28 லட்சமும் செலவழிக்கலாம்.
தேர்தலையும் பிரியாணியையும் பிரிக்கவே முடியாது. டாஸ்மாக் வந்ததில் இருந்து பிரியாணியும், சரக்கும் ‘காம்போ ஆபர்’ போல ஆகிவிட்டது. தேர்தல் ஆணையம் மட்டன் பிரியாணிக்கு ரூ.200, சிக்கன் பிரியாணிக்கு ரூ.180 என விலை நிர்ணயித்துள்ளது. இதன்படி கணக்கிட்டால், ஆயிரம் பேருக்கு பிரியாணி செலவே ரூ.2 லட்சம் ஆகிவிடும்.
இதுவே வேட்பாளரின் செலவு வரம்பில் பாதியை விழுங்கிவிடும். எனவே, தொண்டர்களுக்கு இந்த தேர்தலில் பிரியாணி வழங்கப்படுமா என்பது சந்தேகம்தான்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *