திருவனந்தபுரம் : ஆலப்புழா அருகே யானையுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபரை யானை தந்தத்தால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் அம்பலப்புழா அருகே உள்ள புன்னப்ராவில் தேவி கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவையொட்டி 2 யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த யானைகள் கோயில் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்தன.
நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த ஜினேஷ் (43) என்பவர் ஒரு யானையின் முன் நின்று செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென அந்த யானை அவரை தும்பிக்கையால் வளைத்து பிடித்து தந்தத்தால் வயிற்றில் குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆலப்புழா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் ஜினேத் சிகிச்சை பெற்று வருகிறார்.
Leave a Reply