21 வயது இளம் பெண் சாருலதா, 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் ஆகியோர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கள நிலவரம் :-
எதிர்த்த அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த 90 வயது மூதாட்டி ! ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் !
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராகப் போட்டியிட்ட 90 வயதுடைய பெருமாத்தாள் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் இளம்பெண் ஊராட்சி மன்றத் தலைவராக 21 வயது பெண் சாருலதா என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
எந்த கட்சியாலும் நெருங்க முடியாத ஊராட்சி
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவராகப் போட்டியிட்ட 23 வயது உடைய பொறியாளரான சிந்துலேகா தி.மு.க வேட்பாளரை விட 246 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முடிச்சூரில் 20 ஆண்டுகளாக சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைவரான தம்பதியினர்
காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட மனோகரனும் ஒன்றியதிற்காக போட்டியிட்ட அவரது மனைவி சரஸ்வதி மனோகரனும் வெற்றி பெற்றனர்.
ஒரே ஒரு வாக்கை பெற்று இந்திய அளவில் ட்ரண்ட் ஆன வேட்பாளர்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு இடைத்தேர்தலில் கார்த்திக் என்ற பா.ஜ.க பிரமுகர் கார்த்திக் என்பவர் ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
Leave a Reply