இயற்கை விவசாயம் செய்து வரும் முன்னாள் ராணுவ வீரர்

Share Button

கிருஷ்ணகிரி :-

இயற்கை விவசாயி கோவிந்தசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவாப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் மா.கோவிந்தசாமி இவருக்கு வயது 61. இவர் 2005 தொடங்கி 16 ஆண்டுகளாக மூன்று ஏக்கர் நிலத்தில் மண்புழு உரம், மாட்டுச்சாணம், உள்ளிட்ட இயற்கை உரம் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
இவரிடம் மருத்துவ குணம் வாய்ந்த பாரம்பரிய நெல், நாட்டுத்தக்காளி, நாட்டுப் பப்பாளி, நாட்டு கொய்யாக்கனி, என அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கிறது. இவர் அறுவடை செய்த நெல், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தனது சொந்த வாகனமான ஆம்னி கார் மூலம் சென்று அருகில் உள்ள கிராமங்கள், கிருஷ்ணகிரி நகரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகிறார்.
இவரைப்போல இயற்கை விவசாயிகள் விவசாயம் செய்யும் பொருட்களைச் சந்தைப் படுத்தும் விதமாக விரைவில் மரபுசார் இயற்கை அங்காடி உருவாக்க இருப்பதாகவும் இதில் முழுவதுமாக இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே சந்தை படுத்தவுள்ளதாகவும் மக்கள் நேரடியாக வந்து அவற்றை வாங்கிக் கொள்ளும் வகையில் இந்த சிறப்பு அங்காடி செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

யோகா ஆசிரியராகச் சேவை

இயற்கை விவசாயம் மட்டுமல்லாமல் யோகா ஆசிரியராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். உடற்பயிற்சி, தியானப்பயிற்சி, காயகல்பப் பயிற்சி, போன்றவற்றைச்சேவையாக வழங்கி வருகிறார். மேலும் இப்பயிற்சிகள் குறித்து அவர் கூறியதாவது.
காயகல்ப பயிற்சி உயிர் வளத்தை மேம்படுத்தும் பயிற்சி, எனவும் உடற்பயிற்சி உடல் நலத்தைப் பேணி பாதுகாக்கவும், தியானப்பயிற்சி மனதிற்கு அமைதியும் கொடுக்கும் எனவும் இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற புதிய புதிய நோய்களும் கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்களும் ஏற்படுகிறது.
இவற்றிற்குத் தீர்வாக இதுபோன்ற பயிற்சிகள் அமையுமெனவும் இந்தப் பயிற்சிகளை ஓசூர், சூளகிரி, காவேரிப்பட்டினம் எனத் தேவைப்படும் இடங்களில் நேரடியாகச் சென்று இந்த பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் கூறினார்.
மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை
மாற்றம் காண்பது நன்று
என்னும் திருக்குறளை மெய்ப்பிக்கும் வகையில்  முன்னாள் ராணுவ வீரரும் யோகா ஆசிரியரும் இயற்கை விவசாயம் செய்யும் இவர் இயற்கை முறையில் விவசாயம் செய்ய நினைக்கும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகவும் இளைஞர்கள் விவசாயம் செய்ய  உந்துதலாகவும் செயல்பட்டு வருகிறார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *