கிருஷ்ணகிரி அருகே ஏரிக்கு தண்ணீர் மற்றும் குடிக்க தண்ணிர் கேட்டு 18 கிராம மக்கள் காலி குடங்களுடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த கிராமங்களும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குறிப்பிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எருமாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூரம்பட்டி, பட்டனூர், பொன்னுநகர், மாங்குடி நகர் உள்ளிட்ட 18 கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமத்திற்கு உட்பட கூரம்பட்டி ஏரி, பட்டனூர் ஏரி தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் இருப்பதால் 18 கிராம மக்களும் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இன்றி தவித்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மின் மோட்டார் மூலமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கும் உரிய கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் தொடர்ந்து கூரம்பட்டி கிராம மக்களை புறக்கணித்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நீரேற்று கூட்டுறவு சங்க விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சுமார் 500-க்கு மேற்பட்டவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் இருப்பதாகவும், ஒரு குடம் தண்ணீர் எடுத்து வர சுமார் இரண்டு கிலோ மிட்டர் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது, ஆடு மாடுகளை காப்பாற்ற ரூ 500 முதல் 700 ருபாய் வரை விலை கொடுத்து தண்ணீர் வாங்கி கால்நடைகளை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது.
ஆகையால் பட்டனூர் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து பட்டணனூர் ஏரி மற்றும் கூராம்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதோடு குடிக்கத் தண்ணீர் வழங்க முன் வரவேண்டும்.
இல்லயேல் 18 பட்டி கிராம மக்களும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றினை ஒப்படைத்து விட்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முழுமையாக புறக்கணிக்க போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
ஒட்டுமொத்த மக்களும் குடிக்க தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply