தமிழகத்தில் தேர்தல் செலவீனங்களை நியமிக்கப்பட்ட சிறப்பு பார்வையாளர் மதுமகாஜன் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு திடீரென்று புறப்பட்டு சென்றார். இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுடைய செலவுகளை கண்காணிக்க நியமிக்கப் பட்ட சிறப்பு பார்வையாளர் மதுமகாஜன் கடந்த 27ம் தேதி அவர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். அதன்பிறகு அன்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற முக்கியமான பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் சென்னை திரும்பிய அவர் நேற்று இரவு 10.30மணியளவில் திடீரென சென்னை விமானநிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
Leave a Reply