தமிழகத்தில் 21 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. அதன்படி நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் இடைத்தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதுபோல் தமிழகத்தின் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை 6 அல்லது 7 கட்டங்களாக நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் தமிழகத்துக்கும் புதுவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
Leave a Reply