மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கமல்ஹாசன் வரவேற்பு
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழக அரசையும், அமைச்சர்களையும் நடிகர் கமல்ஹாசன் பகிரங்கமாக விமர்ச்சித்து வந்தார்.
இதனால் தமிழக அரசியல் வரலாற்றில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து கடந்தாண்டு பிப்ரவரி 21ம் நாள் மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகப் படுத்தினார்.
இதனை தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்த அவர் பெரும்பாலான அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனிடையே மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு செய்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதற்கு கமல்ஹாசன் தனது நன்றியினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Great