பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே ஏற்பட்ட பயங்கர தீவிபத்தினால் 150 க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது.
விமான கண்காட்சியை காண வந்தவர்களின் 500க்கும் மேற்பட்ட கார்கள் தீ விபத்தில் சிக்கி எரிந்து நாசமாயின. தீ விபத்தை அடுத்து விமான கண்காட்சியை காண வந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து விமான கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள ஏலகங்கா பகுதியில் ஜக்கூர் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. இந்த விமான நிலையத்தில் கடந்த 4 நாட்களாக விமான கண்காட்சியானது நடைபெற்று வருகிறது. இந்த விமான கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சர்வதேச அளவில் பல போர் விமானங்கள் இங்கு வந்து சாகச நிகழ்ச்சி செய்துகொண்டுள்ளனர். இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனைவரையும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதற்காக கதவு எண் 5திற்கு அருகில் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகி இருக்கிறது.
ஒரே நேரத்தில் பல கார்கள் தீப்பிடித்து கொண்டதால் ஏலகங்கா ஜக்கூர் விமானநிலையம் முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது. விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை அனைத்தனர். ஆனால் கார்கள் அனைத்தும் முழுவதுமாக எரிந்து நாசமாயின. பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் தீயில் எரிந்து நாசமாயின.
Leave a Reply