கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை
4-வது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல். 2021 துபாயில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (16/10/2021) ஐ.பி.எல். கோப்பைக்கான இறுதிப்போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நடைபெற்றது. கால் இறுதிப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியையும் அரையிறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியையும் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்திருந்தது. கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் 2 விக்கெட்களையும் ஷிவம் மாவி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
Leave a Reply