அனைவருக்கும் கல்வி இயக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அத்திமுகம் அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் நான்காவது தேசிய ஓபன் கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அத்திமுகம் பகுதியில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இயங்கி வருகிறது.
இப்பள்ளி மாணவ, மாணவிகள் பெங்களூரில் நடந்த நாண்காவது தேசிய அளவிளன ஓபன் கராத்தே போட்டியில் பங்கேற்று முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கராத்தே அசொசியேசன் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் திரு. அல்டாப் பாஷா முன்னிலையில் போட்டி இயக்குநர் மாஸ்டர் திரு. ராஜலிங்கம் அவர்கள் வெற்றிக் கோப்பைகளை வழங்கினார்.
வெற்றிபெற மாணவ, மாணவிகளையும் கராத்தே மாஸ்டர் திரு. பவித்ராமன் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திருமதி. மகேஷ்வரி அவர்கள், உதவி திட்ட அலுவலர் திரு. நாரயணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அப்துல் சர்தார், ஆசிரியர் பயிற்றுநர் திருமதி. வித்யாலட்சுமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. வெங்கடேசன் மற்றும் பள்ளியின் NGO சகோதரி மேரி சரோஜா அவர்கள் பாராட்டினார்கள்.
Leave a Reply