அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீர் தீ விபத்து
அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ரயில் என்ஜின்கள் அப்புறப்படுத்தப்பட்டன. ரயில் பெட்டிகளுக்கு பெயின்ட் அடிக்கும் இயந்திரம் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் சரியான உண்மை நிலவரம் தெரியவில்லை.
அரக்கோணம் ரயில்வே பணிமனையானது எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு முக்கியம் வாய்ந்த பணிமனையாகும். இந்த பணிமனையில் 400 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.
இன்று மதியம் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பணிமனை முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தன. இத்தகவலை அறிந்த தீயணைப்பு வீரரர்கள் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து வருகிறார்கள். தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அனைத்துவிடலாம் என்று கருதப்படுவதால் பொதுமக்கள் மற்றும் பணிமனையின் ஊழியர்கள் யாரும் அச்சம்கொள்ளவேண்டாம் என கூறப்படுகிறது. சேதம் மதிப்பு மற்றும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.
Leave a Reply