கேரளாவில் முழு ஊரடங்கு அமல், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கேரள அரசு அறிவிப்பு
திருவனந்தபுரம், கேரளா :
கேரளாவில் முழு ஊரடங்கு அமல், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கேரள அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக இன்று முழு ஊரடங்கு அறிவிப்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் இரவு ஊரடங்கை அந்த மாநில அரசு அறிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அந்த மாநிலத்தில் நேற்று மட்டும் 33 ஆயிரத்து 265 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.