சென்னை :-
செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை
வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று திறக்கப்பட உள்ளது.
முதல்வர் முக்கிய ஆலோசனை
நாடே கொரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுகொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் திரும்பி பார்த்திருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்புகள் ஆறுதலைத் தருகின்றன.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவ மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 மற்றும் 12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று அது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் ஆலோசனை அறிவுறுத்த உள்ளார்.
மேலும், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிவறைகள் ஆகியன சுகாதார முறையில் இருக்க வேண்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இன்று நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு முக்கிய முடிவுகள் எனடுக்கபட உள்ளதாக தெரிகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இக்கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Leave a Reply