அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை :-
அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு :
நெல்லை, வேலூர், இராணிப்பேட்டை, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமானதது முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் – வானிலை ஆய்வு மையம் தகவல் :
வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.