பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்

Share Button

புதுடெல்லி :-
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்
மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றுகிறார். இன்று உரையாற்றும் நிகழ்ச்சி 80-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
நாட்டு மக்கள் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய வைரஸான கொரோனாவினால் லட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியும் இதனால் ஏற்பட்டிருக்கிறது. நாட்டு மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதித்திருக்கிறது. பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் வீழ்ந்த நாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் எழுந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீள மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தடுப்பூசிகள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.