தூத்துக்குடி ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மாணவர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது!

Share Button

தூத்துக்குடி ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஒரு மாத பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது .

தூத்துக்குடி ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கராத்தே மற்றும் தடகளம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும், மன அழுத்தம் இல்லாமல், மன வலிமையை மேம்படுத்தி, உடல் வலிமைபெற பல்வேறு சிறப்பு பயிற்சிகளை தலைமை பயிற்சியாளர் இம்மானுவேல் அளித்து வருகிறார். இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தூத்துக்குடி ஈ.சி.பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பள்ளி, கல்லூரு மாணவ, மாணவியருக்கு ஒரு மாதம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றனர். இந்நிலையில் பயிற்சியின் நிறைவு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. இதில், ஈசி பிட்னஸ் ஸ்போர்ட் அகாடமி நிறுவனரும், தலைமை பயிற்சியாளருமான இம்மானுவேல் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜே.சி. எச்.ஜி.எப். ஜே.சி.ஐ. தூத்துக்குடி ப்ளூ சீ தலைவர் பரமசிவன் மற்றும் துணைத்தலைவர் ஜே.எப்.எம். ஜினு ஆகியோர் பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் நினைவு கேடயம் வழங்கினர்.

நிகழ்ச்சியில், கோஸ்டல் பவர் பிளான்ட் எம்.டி. பரமேஸ்வரன், மாவட்ட தொழில்சங்க செயலாளர் செக்கி ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

இதில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான அகாடமி பயிற்சியாளர்கள் சிவபெருமாள், மாரீஸ்வரன், மதி, சோபியா மற்றும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *