புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகளின் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா

புதுக்கோட்டை :-
புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகளின் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா இன்று 08.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் பீட்டர் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை செயலாளர் ராஜ்குமார், தூத்துக்குடி மண்டலத்தலைவர் ராதாகிருஷணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பிரதாப் ராஜா, மாநில கூடுதல் செயலாளர் காளிதாசன், கன்னியாகுமரி மண்டலத்தலைவர் வைகுண்டராஜா, கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் பி.என்.பெரியசாமி வரவேற்புரையாற்றுகிறார்.
விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு புதுக்கோட்டை சங்கத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை பகுதியில் புதிய கண்காணிப்பு கேமராக்களை தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுதிர், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்த ராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
மேலும், மாநில துணைத் தலைவர் வெற்றி ராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ், கோவில்பட்டி மாவட்ட பொருளாளர் மாரியப்பன், தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாச்சலம், நகர தொகுதி செயலாளர் ஆனந்தராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜம், செய்தி தொடர்பாளர் அந்தோணி இன்பராஜ், கோவில்பட்டி செயலாளர் ரவி மாணிக்கம், இளைஞரணி அமைப்பாளர் முத்து, தூத்துக்குடி மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அக்னிராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். சங்க செயலாளர் முருகன் நன்றியுரையாற்றுகிறார். நிகழ்ச்சியல் துணைத்தலைவர் சர்க்கரை, செயலாளர் கே.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.











Leave a Reply