கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு!
கேரளா :-
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு.
கேரளாவில் பெரும்பாலும் முதல்வர்கள் எளிமையாக தான் இருப்பார்கள். அதிலும் உம்மன் சாண்டி மிக மிக சாதாரண மனிதராகத்தான் இருந்தார்.
51 வருடம் தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உம்மன்சாண்டி இரண்டு முறை கேரளாவின் முதல்வராக இருந்திருக்கிறார்.
முதல்வராக இருந்த போது கூட கிறிஸ்மஸ் பிரார்த்தனைக்காக தேவாலயம் ஒன்றின் படியில் தன்னந்தனி ஆளாக காத்துக் கிடந்து காட்சிகள் மீடியாக்களில் வெளிவந்து இப்படி ஒரு முதல்வரா? என்ற ஆச்சரியத்தை மக்களிடம் ஏற்படுத்தியது.
முதல்வர் பதவியை நிறைவு செய்த பின் பின்னர் எங்கு சென்றாலும் பஸ்ஸில் அதுவும் டிக்கெட் எடுத்து செல்வது தான் அவரது வழக்கம் . மிகச் சாதாரணமாக மற்ற பயணிகளோடு பயணிப்பார்.
தான் முதல்வராக இருந்தபோது தனது அறையில் என்ன நடக்கிறது என்பதை இணையதளம் மூலம் நேரலை செய்து வெளிப்படையான நிர்வாகத்தை அமுல் படுத்திய ஒரே முதல்வர் உம்மன்சாண்டி.
சில மாதத்திற்கு முன்பு உடல்நலம் குன்றிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார்
ஆனால் உம்மன்சாண்டிlயோ இதை மறுத்து எனக்கு உடல் சோர்வாக தான் இருக்கிறது. நல்ல சிகிச்சை கிடைக்கிறது என்றும் முதல்வருக்கு அளித்த கடிதத்தை திரும்ப பெற்று விடு என்று அண்ணனுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
Leave a Reply