ரஜினி பயன்படுத்திய பைக் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விசிட்!
ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை ரஜினி பார்வையிட்டார்!
சென்னையில் உள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டுள்ளார். சூப்பர் ஸ்டாருடன் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம் எஸ் குகன் ஆகியோர் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்டுள்ளனர்.
ஏவிஎம் நிறுவனம் தற்போது தங்கள் ஸ்டுடியோவின் படப்பிடிப்பு தளத்தை அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறது. ஒரு பகுதியை மட்டும் இதற்காக ஒதுக்கி இருக்கும் நிறுவனம் அதற்கு ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் என பெயரும் வைத்திருக்கிறது.
இதை சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அந்த அருங்காட்சியகத்தில் நம்மை வியக்க வைக்கும் பல விஷயங்களும் இடம்பெற்றுள்ளது.
78 ஆண்டுகளாக ஏவிஎம் தயாரித்த படங்களில் ரசிகர்கள் பார்க்கப்பட்ட அத்தனை விஷயங்களும் அந்த மியூசியத்தில் இருக்கிறது.
உதாரணத்திற்கு ஓவியங்கள், பிரிட்டிஷ் கால கார்கள், படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஆரம்ப காலத்தில் இருந்த புகைப்பட சாதனங்கள் என ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை பிரம்மிக்க வைத்திருக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் உருவ சிலை. சிவாஜி திரைப்படத்தில் வரும் அந்த சிலையின் முன்பாக பலரும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
மேலும் பாயும் புலி திரைப்படத்தில் ரஜினி பயன்படுத்திய பைக்கும் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் இதையெல்லாம் சுற்றி பார்த்து கண்டு களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
Leave a Reply