மயிரிழையில் உயிர் தப்பிய ஃ பட ஹீரோ பிரஜின்!

Share Button

புதுவரவு சினிமா :-

மயிரிழையில் உயிர் தப்பிய ‘ஃ’ பட ஹீரோ பிரஜின்!

பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் இயக்குநர் ஸ்டாலின் V இயக்கும் படம் ‘ஃ’. இதன் படப்பிடிப்பு தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், படத்தின் ஹீரோவும் இயக்குனரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக வரும் செய்திகள் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் சார்பில் பொன் செல்வராஜ் தயாரிப்பில் மற்றும் C.நளினகுமாரி இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘ஃ’.

இயக்குநர் ஸ்டாலின் V இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக காயத்ரி ரமா நடித்துள்ளார்.

முக்கிய வேடத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் நடிக்க, வில்லனாக இயக்குநர் ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் ஏழாம் அறிவு ராமநாதன், KPY சரத், KPY வினோத், வடக்கு வாசல் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பட்டிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

தாயம் படத்திற்கு இசையமைத்த சதீஷ் செல்வம் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூங்கா, மாமனிதன் ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தேவசூர்யா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்தன் ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை ஆக்சன் பிரகாஷ் வடிவமைத்துள்ளார்.

இயக்குனர் ஸ்டாலின் இந்த படம் பற்றி கூறும்போது, “இந்தப் படத்தின் மூன்று புள்ளிகளாக பிரஜின், பருத்திவீரன் வெங்கடேஷ் மற்றும் நான் என மூவரும் நடித்துள்ளோம். ஒரு சைக்கோ ஓவியர் கதாபாத்திரத்தில் வடக்கு வாசல் ரமேஷ் நடித்துள்ளார்.

இந்த படம் கர்மாவை பற்றியது. நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு ஏற்ப கர்மா நமக்கு திருப்பிக் கொடுக்கும். நாம் இளம் வயதில் நம்மை அறியாமலேயே செய்த தவறுகளுக்கு கூட கர்மா நிச்சயம் பதில் சொல்லும். அதனால் கெடுதல் செய்தால் கர்மா மன்னிக்காது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது” என்றார்.

மேலும் இந்த படத்தின் முக்கியமான சண்டை காட்சி ஒன்றை படமாக்கிய போது தீ விபத்தில் இருந்து தானும் கதாநாயகன் பிரஜினும் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவத்தையும் விவரித்தார் இயக்குநர் ஸ்டாலின்.

“சென்னை தரமணியில் நானும் நாயகன் பிரஜினும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது எனக்கும் அவருக்கும் நடக்கும் சண்டைக் காட்சிதான் அங்கே படமாக்கப்பட்டது.

சுற்றிலும் தீ எரியும் நிலையில் நானும் பிரஜினும் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படிப்படியாக அதிகரிக்க வேண்டிய தீ, தொழில்நுட்ப குழுவினர் செய்த சிறிய தவறால் மிக வேகமாக பற்றி எரிய ஆரம்பித்தது.

ஆனால் அதற்குள் காட்சிகளை எடுத்தாக வேண்டும் என சுதாரித்த நானும் பிரஜினும் வேகவேகமாக எங்களது காட்சிகளை படமாக்கி முடித்தோம். அந்த சமயத்தில் அதிக வெப்பத்தை தாங்கிக்கொண்டு அந்த காட்சிகளில் நாங்கள் இருவரும் நடித்தோம்.

கிட்டத்தட்ட ஒரு கட்டத்தில் மயிரிழையில் உயிர் தப்பினோம் என்றே சொல்லலாம். ஆனாலும் ஆக்சன் இயக்குனர் ஆக்சன் பிரகாஷ் துரிதமாக செயல்பட்டு அந்த காட்சிகளை திட்டமிட்டபடி படமாக்கி முடித்தார் என்று கூறினார் இயக்குநர் ஸ்டாலின்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *