அனுப்பர்பாளையம் பகுதிகுட்பட்ட ஆத்துப்பாளையம் பாரதிநகரில் வசித்து வரும் மூதாட்டி பெயர் தமிழ்ச்செல்வி வயது 75 இவர் கடந்த 3 ஆண்டு காலமாக இடுப்புக் கீழ் குடுவ எலும்பு முறிந்து, நடக்க முடியாத நிலையில் தன் இயற்கை உபாதைகளைக் கூட தான் செய்ய முடியாத நிலையில் படுத்த படுக்கையில் உள்ள மூதாட்டியான இவர் தன் கடமையை சரியாக செய்யனுமே என்கின்ற உணர்வோடு இன்று நடைபெற்ற தேர்தல் நாளில் எனது ஓட்டுரிமையை செலுத்திட தன் பிள்ளைகள், மருமகளின் உறுதுனையோடு ஆட்டோவில் அழைத்துச் சென்று வாக்கு செலுத்தினார்.
தன்னுடைய உரிமையை இந்த நாட்டிற்கு பதிவிட்டு வந்த மூதாட்டியின் செயல்பாடு அறிந்த அனுப்பர்பாளையம் பகுதி வாக்குச் சாவடியில் உள்ள ஆசிரியர் ஆசிரியைகள், காவல் அதிகாரிகள், பொது மக்கள் என அனைவரும் இந்த மூதாட்டி வாக்களித்ததை பார்த்து பலரும் இந்த மூதாட்டியை பாராட்டி வணங்கினார்கள்.
தன் வாழ்வில் கடந்து வந்த பயணத்தை விட இன்று என் உரிமையை இந்த நேரத்தில் பதிவிட்ட மன திருப்தியில் தமிழ்ச்செல்வி மூதாட்டி பெரும்மகிழ்ச்சியுடன்.
Leave a Reply