கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை ஆண்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர் கு.கணேசன் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை ச.உமா வரவேற்றார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பகல்நேர பராமரிப்பு மையத்தில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் பரிசுகளும், இனிப்பும் வழங்கப்பட்டது. பிறந்தநாள் கொண்டாடிய அன்வித்தாராஜ் என்ற மாணவிக்கு தமிழில் பிறந்தநாள் பாட்டு பாடி அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கே.பாரதி, எஸ்.ஷகீலா, ஏ.சுபைதாபானு, வைரியம்மாள், கவிதா, ரமேஷ், மற்றும் ஆர்.ஆர்.ராஜவேல், ஆர்.ஜெயப்ரியா, சூர்யா மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புடன் கூடிய உணவு வழங்கப்பட்டது.
இறுதியாக ஆசிரியர் ர.சக்தி நன்றி கூறினார். அனைவரும் ஒருவருக்கொருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
Leave a Reply