நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து : அடுத்தவங்க நம்ம வாழ்க்கைக்கு குடுக்கிற Certificate வச்சு கால்படி அரிசி கூட வாங்க முடியாது!
நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து :
அடுத்தவங்க நம்ம வாழ்க்கைக்கு குடுக்கிற Certificate வச்சு கால்படி அரிசி கூட வாங்க முடியாது.விமர்சனம் பண்றவங்க நம்ம சுக துக்கங்கள் ல பங்கெடுக்க முடியாது.
தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்துக்கு குடுக்கிற அட்வைஸ் இருக்கட்டும். முதல்ல உங்க குடும்பத்துல நீங்க மட்டும் சம்பாதிக்கிற நபரா இருந்திட்டு , திடீர்னு பாதியிலேயே உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா உங்க குடும்பம் என்ன ஆகும்னு யோசிச்சி இருக்கிங்களா? அப்படி இல்லனா உடனே யோசிச்சு Term Insurance Plan போட்டுருங்க.
பெருந்தொற்று காலத்துல இருக்கோம். உலகமே Stress ல இருக்கு. திடீர்னு உங்களுக்கோ உங்க குடும்பத்தில இருக்கிற ஒருத்தங்களுக்கோ நோய் தாக்கினா Hospital ல போய் அட்மிட் ஆகனும். நீங்க வருஷக்கணக்கா சேத்து வச்சிருந்தது எல்லாம் 2 நாள் ல செலவாயிரும். அப்படி ஒரு சூழல் வந்தா என்ன பண்ணனும் னு யோசிச்சி இருக்கிங்களா? இல்லனா உடனே Medical Insurance எடுங்க
இப்ப Internet ல Facebook, Instagram , Twitter அ free ஆ Use பண்ணி அடுத்தவங்களுக்கு வண்டி வண்டியா அட்வைஸ் பண்றோம். அடுத்த 20 வருஷத்துல எல்லாமே நிச்சயமா Payable ஆ இருக்க போகுது. இன்னைக்கு ஒரு குடும்பத்துக்கு மாசம் 50000 செலவுனா 20 வருஷம் கழிச்சு உங்க செலவு மாசத்துக்கு சுமார் 3 லட்சமா இருக்கும். அதுக்கு என்ன பண்ணனும்?
தனுஷ் ஐஸ்வர்யா குழந்தைங்கள விடுங்க. பணம் இருக்கு நினைச்ச இடத்தில படிக்க வச்சிருவாங்க. நம்ம குழந்தைங்க மேற்படிப்புக்கு நம்ம கிட்ட என்ன Plan இருக்கு? புடிச்சத படிக்க வைக்கிறோமா இல்ல கிடைக்கிறத படிக்க வைக்க போறாமா? அதுக்கு என்ன பண்ணனும்?
ரிட்டையர்மெண்ட எப்படி எதிர்கொள்ள போறோம்? நான் உன்ன பெத்துட்டேன் அதனால நீதான் என்ன பாத்துக்கனும்னு பிள்ளைகள் கிட்ட கையில காசு இல்லாம போக போறோமா? இல்ல இப்ப இருந்து கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு 55 வயசில கணிசமான தொகையோட நம்ம செலவையும் பாத்துட்டு நமக்கு பிடிச்சத பண்ணிட்டு நம்ம பேரப்பிள்ளைகளுக்கும் பிடிச்சத வாங்கி குடுக்க போறோமா?
மேலசொன்ன எல்லாத்தையும் பண்ணிட்டேன். நான் தனுஷ் ஐஸ்வர்யா க்கு அட்வைஸ் பண்ணியே தான் தீருவேன் னா ஒரு விஷயத்த மனசுல வச்சிக்கோங்க.
நம்ம குடும்பத்தில யாராவது Divorce பண்ணா இப்படிதான் Photo போட்டு ஆபாசமா கமெண்ட் பண்ணுவோமா? 10 வருசம் கழிச்சி நம்ம பிள்ளைக்கு ஒருவேளை இப்படி நடந்தா நாம என்ன பண்ணனும்னும் நினைச்சு வச்சுக்கோங்க.
கமல்ஹாசன் சொல்ற மாதிரி நம்ம வாழ்க்கையே எதிர்பாராததை எதிர்பாருங்கள் னு தான் போய்டு இருக்கு
இருக்கிற ஒரு வாழ்க்கைய பொருளாதார சுதந்திரத்தோட யாரையும் சார்ந்தோ சுரண்டியோ இல்லாம உங்களுக்கு பிடிச்ச மாதிரி தனியாவோ தம்பதியாவோ வாழுங்க. அவ்ளோதான்.
HEMA RAKESH
Leave a Reply