சென்னையில் கன மழை காரணமாக 11 சுரங்கப்பாதைகள் மூடல், 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
சென்னை :-
சென்னையில் கன மழை காரணமாக 11 சுரங்கப்பாதைகள் மூடல், 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தமிழகம் ழுழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்கள் பல்வேறு சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு சென்னையில் கன மழை காரணமாக பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்பது யாரும் எளிதில் மறந்து விட முடியாது.
2015 ஆம் ஆண்டைப்போலவே, தற்போது 2021 நவம்பர் மாதம் சென்னையில் மழை வெளுத்துவாங்கி வருகிறது. இதனால் உணவின்றி, தங்க இடமின்றி, மாற்ற உடையின்றி அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று இரவில் இருந்து காற்றுடன் கனமழை பெய்து வருகிறது இதனால் மழை வெள்ளம் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் 11 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மழை நீர் சீரடையும் வரையில் இந்த நிலை நீடிக்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் :- (1) வியாசர்பாடி (2) கணேஷபுரம் (3) அஜாக்ஸ் (4) கொங்கு ரெட்டி (5) மேட்லி (6) துரைசாமி (7) பழவந்தாங்கல் (8) தாம்பரம் (9) அரங்கநாதன் (10) வில்லிவாக்கம் (11) காக்கான்
மழை நீர் சீரடையும் வரையில் இந்த நிலை நீடிக்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.