அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் அகற்றியதினால் விசிகவினர் சாலை மறியல்!
அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம் :-
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் அகற்றியதினால் விசிகவினர் சாலை மறியல்!
டிசம்பர் 6 அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் வைக்கப்பட்ட அவர்களின் புகைப்படம் அகற்றியதினால் இன்று காலை 10 மணி அளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தலைமை க.கௌதம் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் முன்னிலையில் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன், ஒன்றிய நிர்வாகிகள் சசி சந்தர் அருண் வஜ்ரவேல் ஜெயராஜ் குணசேகரன் ஒன்றிய கவுன்சிலர் நரேஷ் பாக்யராஜ் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
Leave a Reply