நீட் தேர்வால் இனி ஒரு உயிர்கூட போகக்கூடாது, அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை :-
நீட் தேர்வால் மாணவர் பலி. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராத இந்த நீட் தேர்வு என்பது தேவையற்ற ஒன்று என்று பா.ம.க. இணைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு நடைபெற்ற இரு நாட்கள் இடைவெளியில் 2-வது மாணவரை பலி கொண்டுள்ளதை நிகைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒன்று இந்த நீட் தேர்வு. தேவையில்லா நீட் தேர்வு மாணவர்களை எவ்வாறு பலி வாங்கி வருகிறது என்பதை சொல்லி விளக்கத் தேவையில்லை. அனைவரும் அறிந்த ஒன்று தான் தொடரும் இந்த பலி சம்பவம்.
மாணவர்களின் உயர்வுக்கு வழி வகுக்க வேண்டிய கல்வி, மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், மாணவர்கள் எந்த ஒரு சூழலையும் எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. மாணவர்கள் என்றுமே தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்துடன் இருக்க வேண்டும்.
இனியும் நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது நமது தமிழக அரசின் கடமை ஆகும். அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இனி நீட் தேர்வால் ஒரு மாணவனின் உயர் கூட போகக்கூடாது.
உயிரிழந்த மாணவி கனிமொழியின் தற்கொலை வேதனையளிக்கிறது மிகவும் வருத்தமளிக்கிறது. மாணவியின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Leave a Reply